சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரட்டூரில் பதுங்கியிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டனை பிடிப்பதற்காக விழுப்புரம் போலீசார் முயன்றுள்ளனர். அப்போது, ஆரோவில் எஸ்.ஐ.பிரபு மீது ரவுடி மணிகண்டன் கத்தியால் தாக்குதல் நடத்தியதால், போலீசார் இரண்டு முறை துப்பாக்கியால் ரவுடி மணிகண்டனை சுட்டதில் ரவுடி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ.பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் உள்ளதாகவும், ரவுடிகள் பூபாலன், மணிகண்டன் இடையேயான மோதலில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
0 Comments