நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான தகவல் இரு அவைகளின் செயலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் எடுத்து கொள்ளப்பட உள்ளன. சட்ட வடிவம் பெறுவதற்கான இரு அவசர சட்டங்கள் இந்த கூட்டத்தொடருக்கான பட்டியலில் உள்ளன.
இவற்றில் ஒன்று, 2019ம் ஆண்டு நிதி சட்டம், 1961ம் ஆண்டு வருமானவரி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், பொருளாதார மந்தநிலையை குறைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக புதிய மற்றும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைப்பது என்ற அவசர சட்டம் ஆகும்.
இதையடுத்து, இ-சிகரெட்டுகள் மற்றும் அதுபோன்ற பொருட்களின் விற்பனை, தயாரிப்பு மற்றும் சேமித்து வைத்தல் ஆகியவற்றை தடை செய்ய வழிவகுக்கும் அவசர சட்டம் ஆகும்.
இந்த இரு அவசர சட்டங்களும் கடந்த செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21ல் தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிவடையும் வழக்கம் இருந்து வந்தது.
0 Comments