ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் உள்ளிட்டோர் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 182 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments