Tamil Sanjikai

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடன். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து 2011 வருடம் சுட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் ஹம்சா பின்லேடன்.

பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹம்சா பின்லேடன். தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வழியே இயக்க உறுப்பினர்களிடம் தகவல்களை அனுப்பி, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி அளவிற்கு பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹம்சா பின்லேடன், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் ஈரான் நாட்டில் தஞ்சமடையலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment