உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில், கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, சின்மயானந்த் உடல்நிலை மோசமடைந்தது. சிறையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆஞ்சியோகிராம் சோதனைக்காக, லக்னோவுக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சின்மயானந்த் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய நோய் மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்தது.
0 Comments