Tamil Sanjikai

காஷ்மீர் பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் அணைத்து நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் விவகாரங்களுக்கான மந்திரி அலி அமின் கந்தாபூர், இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டரில், இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான் மந்திரி கூறியிருப்பதாவது:-

“ காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்தால், போருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்படும். பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளும் எங்களுக்கு எதிரி நாடுகளே. எனவே அந்த நாடுகள் மீதும் நாங்கள் ஏவுகணைகளை வீசுவோம்” எனக் கூறுகிறார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த விவகாரத்தை சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல முயன்று தோற்றுப்போன பாகிஸ்தான் இந்தியா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற கருத்தை சார்க் நாடுகள் உள்பட உலகின் பல நாடுகள் ஆதரித்துள்ளன. அரபு நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளதால், கடும் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தொடர்பை ஒரு தலைபட்சமாக துண்டித்து வருகிறது.

0 Comments

Write A Comment