பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த லால்ஜி டண்டன் ((Lal Ji Tandon)), மத்திய பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பீகார் மாநிலத்துக்கு பாகு சௌகான் ((Phagu Chauhan)) புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் மத்திய பிரதேச மாநில ஆளுநர் அனந்திபென் பட்டேல் ((Anandiben Patel,)), உத்தரபிரதேச மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜக்தீப் தன்கர் ((Jagdeep Dhankhar)), நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி, மற்றும் திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ்((Ramesh Bais)) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments