Tamil Sanjikai

ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு எதிராக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பேரணி நடத்த போவதாக , அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவழியினர் நடத்தவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு எதிராக அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி நடத்த உள்ளதாக கேட்டி ஹாப்கின்ஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில், ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு எதிராக, ஹூஸ்டன் நகரின் மசூதிகளில் பேரணி நடத்தப் போவதாதகவும், பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கான பேருந்து எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், மசூதிகள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல, ஒருங்கிணைப்பும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் நிறைந்த இடம் எனவும் அவர் கூறியிருந்தார்.

இவரின் இந்த பதிவிற்கு சில ஆதரவுகளும், பல எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. பேரணி நடத்த அவர்களிடம் ஆயிரம் காரணம் இருப்பினும், அதை மசூதியில் மேற்கொள்வது சரியான முறையல்ல. மசூதிகள் வழிபாட்டுத்தலங்களா அல்லது அரசியல் செய்யும் இடமா? என்ற கேள்வியையே இவர்களது இச்செயல் தோற்றுவிக்கின்றன என பலரும் கூறி வருகின்றனர்.

மோடி வரவேற்பு நிகழ்ச்சிக்கு எதிரான இஸ்லாமியர்களின் பேரணி குறித்து "ஸ்டாப்திபஸ்" என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.

0 Comments

Write A Comment