பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் விமானத்தை தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வரும் 21 - 27 வரை, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக, 20ம் தேதி அமெரிக்கா புறப்படும் அவர், 28ல் நாடு திருப்புகிறார். விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் அவர், பாகிஸ்தான் நாட்டு வான்வெளியை கடந்தே செல்ல வேண்டும்.
மாற்று பாதையில் சென்றால் நேர விரயம் ஆகும் என்பதால், பிரதமரின் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதி கூறி, மத்திய அரசின் சார்பில் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடியின் விமானத்திற்கு வழிவிட முடியாது என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், மோடியின் நடவடிக்கைகள், பாகிஸ்தானுக்கு எதிரானதாக இருப்பதாகவும், அதனால் அவர் பயணிக்கும் விமானத்தை தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க அனுமதிக்க முடியாது என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முஹம்மது குரேஷி தெரிவித்துள்ளார்.
0 Comments