சென்னை மங்களூரு இடையேயான விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து நேற்று புற்றப்பட்டு, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதிகாலை 6:30 மணி அளவில் கேரள மாநிலம் சோரனூர் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்தால் யாருக்கும் காயம்;ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து உயரதிகாரிகள் சம்பவ இடத் துக்கு விரைந்துள்ளனர். தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக வரும் மற்ற ரயில்கள் தாமதாக செல்லும் என தெரிகிறது
0 Comments