மகா சங்கராந்தி விழாவையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 30வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இதில், தென்கொரியா, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்தோரும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
பல வித வடிவங்களில் பட்டங்களை தயாரித்த ஆர்வலர்கள், அதனை வானில் பறக்கவிட்டனர். ஆக்டோபஸ், புலி, பிரம்மாண்ட சக்கர வடிவில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்த காட்சியை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர் . அகமதாபாத்தில் பட்டம் விடுவதற்கான சூழல் நிலவுவதாகக் கூறிய வெளிநாட்டு ஆர்வலர்கள், மாநில அரசு செய்துள்ள இந்த ஏற்பாடுகளை மிகவும் பாராட்டினர்.
குஜராத் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் பட்டம் விடும திருவிழாவை கண்டுமகிழவே இங்கு வந்தாக ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும், மகாசங்ராந்தியின் போது, குஜராத் மாநில அரசு சார்பில் இவ்விழா கொண்டாபட்டு வருகிறது. இதன் காரணமாக அகமதபாத் நகர கடைகளில் பல வண்ண பட்டங்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.
0 Comments