Tamil Sanjikai

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு பின் 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்திருந்தது. டெல்லியில் காற்று மாசு உச்சகட்ட அளவை எட்டியிருப்பதால் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் இது மேலும் மோசமடைந்து காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.

மேலும் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை

காற்றின் வேகம் குறைவு என்ற சாதகமற்ற வானிலை சூழலால் டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்றில் PM 10, PM 2.5 கரிம நுண்துகள்கள் அளவு கூடிக் கொண்டே இருக்கிறது. 19 இடங்களில் காற்றுத் தரம் கடுமையாகவும், 17 இடங்களில் மிக மோசமாகவும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே முடிந்தவரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே காற்று மாசு காரணமாக டெல்லியில் மாஸ்க், காற்றை சுத்தப்படுத்தும் கருவிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

0 Comments

Write A Comment