Tamil Sanjikai

கேரளாவில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்த தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மஞ்சக்கட்டி என்ற பகுதியில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளும் இடையே நடைபெற்ற மோதலில், 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, கேரளாவில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கேரள காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடக வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

0 Comments

Write A Comment