சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் திடீர் மழை மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் அதிக அளவிலான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
0 Comments