காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. அவரது கணவர் ராபர்ட் வதேராவை, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்து, உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசியலுக்கு வந்து சேவை செய்ய தான் விரும்புவதாக அண்மையில் ராபர்ட் வதேரா சூசகமாகத் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும்நிலையில், மோராதாபாத் பகுதியில் அவரை மக்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி அங்குள்ள காங்கிரஸ் கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
0 Comments