Tamil Sanjikai

அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனம் உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு அல்ல என்றும் சுந்தர் பிச்சை உறுதியுடன் தெரிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்விஷயத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக, கூகுள் நிறுவனம், சீனாவுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக இயங்கி வருவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment