இந்து தீவிரவாதி என்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் அரவக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கோட்சேவை குறிப்பிட்டு பேசிய கமல், சுதந்திர இந்தியாவுக்கு பின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்து முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிபடுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பேசியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments