Tamil Sanjikai

குடியரசுத் தினக் கொண்டாட்டங்களின் போது டெல்லியின் முக்கிய இடங்களில் தொடர் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் லஜ்பத் நகர், கிழக்கு டெல்லி உள்ளிட்ட இடங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் கனி மற்றும் ஹிலால் என்று தெரியவந்தது.

குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது வடக்கு டெல்லியின் எரிவாயு பைப் லைன், லஜ்பத் நகர், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்கள், பாரம்பரியச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததும், அதற்காக இருவரும் உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இரண்டு தீவிரவாதிகளும் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் நாசவேலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment