திருச்சி தெப்பக்குளம், சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மில் இன்று பணம் நிரப்ப கொண்டு வந்த ரூ.18 லட்சம் பணத்தை வங்கி ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை கும்பலொன்று பணத்தைக் கொள்ளையடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியின் முக்கிய கடைவீதி பகுதியான, நந்திக்கோவில் தெரு சிட்டி யூனியன் வங்கியில் இருந்து, ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப, ரூ.36 லட்சம் கொண்டு சென்றனர். வங்கி ஊழியர்களை திசை திருப்பி, ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments