மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, நெல்லை மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொள்ள இது மிகவும் உதவும் என தெரிவித்துள்ளனர்.
0 Comments