Tamil Sanjikai

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னருடனான சிவசேனா தலைவர்களின் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

இந்த நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார். மராட்டியத்தின் தோற்றம் மற்றும் அரசியல் உருமாறி வருகிறது. அதனை நீங்கள் காண்பீர்கள்.

நீதிக்கான எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மராட்டியத்தின் அடுத்த முதல் மந்திரியாக சரத் பவார் நிச்சயம் ஆகமாட்டார் என்று அவர் கூறினார்.

0 Comments

Write A Comment