பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில் யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், மோடியின் முதலாம் பதவிக்காலத்தில் நிதி அமைச்சராக பதவி வகித்த அருண் ஜெட்லி, உடல் நிலை காரணமாக அமைச்சரவையில் தனக்கு இடம் வேண்டாம் என மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். ஏற்கனவே இது குறித்து வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்து இருந்தேன். அரசுக்கும் கட்சிக்கும் வெளியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என கூறி உள்ளார். ஏற்கனவே அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments