நவிமும்பை, ஐரோலி பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு 2 முறை கவுன்சிலர் பதவி வகித்தவர் ராமாஷிஸ் யாதவ்(வயது47). இவர் மீது 27 வயதான நவிமும்பை மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவர் ரபாலே எம்.ஐ.டி. போலீசில் பரபரப்பு புகாா் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தின் போது கவுன்சிலர் ராமாஷிஸ் யாதவ் எனக்கு அறிமுகம் ஆனார். 2 ஆண்டுகளுக்கு முன், வேலை விஷயமாக அவரது அலுவலகத்துக்கு சென்று இருந்தான்.அப்போது அவர் என்னை மிரட்டி கற்பழித்தார்.
மேலும் அவரது செல்போனில் என்னை ஆபாசமாக படம் பிடித்தார். பின்னர் அந்த படத்தை இணைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவரது அலுவலகம் மற்றும் தனியார் விடுதிகளுக்கு என்னை அழைத்து சென்று கற்பழித்தார்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் கவுன்சிலரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
0 Comments