கர்நாடகா மாநிலத்தில் காலியாக இருந்த ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளிலும் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 6 ஆயிரத்து 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் 6-ம் தேதி எண்ணப்பட இருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸும்ம், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா, ராம்நகரம் சட்டப்பேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி களத்தில் உள்ளனர்
0 Comments