இலங்கையில் சமீபத்தில் தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடந்தது போல மேலும் பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இத்தகைய, தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்த வைக்கப்பட்டிருந்த ஆடைகளை, சாய்ந்த மருது பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை செய்யப்படுவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில்,
தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது. இன்று முதல் அவசரகால உத்தரவின் கீழ் தடை செய்வதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கம் மிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக அதிபர் இந்த தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக அதிபர் அலுவலகம் தகவல் தெரிவித்து உள்ளது.
0 Comments