விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தெலுங்கு பதிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
96 படத்தின் தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனும் 96 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். எனவே 96 படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 96 படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டதற்கு, பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக மறுஉருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறியிருந்தார். திரிஷா வேடத்தில் நடிக்க வேறு நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
0 Comments