Tamil Sanjikai

சென்னையில், காதலருடன் சேர்ந்து நடுரோட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார், கல்லூரி மாணவி ஒருவர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் பிரசன்னா லிப்சா. இவர் தேனாம்பேட்டை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுகண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இளைஞர் ஒருவரும், அவரது பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் பிரசன்னா லிப்சாவிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து பிரசன்னா லிப்சா அளித்த புகாரின்படிபடி வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் இருவரையும் தேடி வந்தனர். இதையடுத்து, சூளைமேட்டை சேர்ந்த ராஜூ மற்றும் அவரது தோழியும் கல்லூரி மாணவியுமான சுவாதி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment