Tamil Sanjikai

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 25ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்றத்தில் அடைத்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வந்தால் அவர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், அவ்வாறு பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக, உடனடியாக வேறு ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு பணிஉத்தரவு வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ளனர். ஒரு சில நாட்களுக்கு மன்னர் தான் இந்த தற்காலிக ஆசிரியர்களின் சம்பளம் 7500 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டது .ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பிஎட் பட்டம் பெற்றவர்களும் இன்று முதல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment