அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்னரே வெளியானதால் கடந்த 3 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எம்.கே. மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் தமது உறவினர் மூலம் வினாத்தாளை சுரேஷ்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். அதை தமது நண்பர் ஹரிகிருஷ்ணனிடம் அவர் பகிர்ந்துள்ளார்.
ஹரிகிருஷ்ணன், அவ்வினாத்தாளை தமது பிற நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். இவ்வழக்கில், வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
0 Comments