10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுக்கான நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடத் தேர்வுகளின் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு நடத்தப்பட வேண்டிய மொழிப்பாட தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 க்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள், காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.45 க்கு முடியும் என்றும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
0 Comments