Tamil Sanjikai

சிரியா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையுடன், மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் மற்றும் சிரிய ஜனநாயக படைகளும் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்க உதவியுடன் சிரிய ஜனநாயக படைகள், கிழக்கு யூப்ரடீஸ் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினரை வீழ்த்தி பல்வேறு இடங்களை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில், நாட்டின் கிழக்கே டெயிர் அல்-ஜோர் பகுதியில் பேக்கோஜ் நகரில் 20 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து மீதமுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோன்று குடிபெயர்ந்த பொதுமக்கள் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

0 Comments

Write A Comment