Tamil Sanjikai

சென்னையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மதுரவாயல், நெற்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று அதிகாலை 3 மணி முதல் மும்முனை மின்சார இணைப்பு உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மட்டுமே மின் சப்ளை இருந்தது , ஓர் முனை மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்பு இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று , அதிகாலை முதலே மின் இணைப்பு இல்லாததால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை கூட செய்யமுடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள், சமையலுக்கு தேவையான மிக்ஸி, கிரைண்டர் இயக்க முடியாததால் இன்றைய பண்டிகை கொண்டாட களையிழந்து போனதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மிகக்குறைந்த கட்டிடங்களில் மட்டுமே, மும்முனை மின் இணைப்பு இருப்பதால், பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புகார் தெரிவிக்க மின்சார வாரிய அலுவலகத்திற்கோ, இலவச சேவை அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டால், யாரும் பதில் அளிக்கவில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment