அமெரிக்காவில் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நேற்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், பொதுமக்கள் 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமுற்ற சிலர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 Comments