மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அங்குள்ள ஒரு ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.
பின்னர் அவர் எடுத்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது.
0 Comments