Tamil Sanjikai

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார் ஆடை என்கிற படத்தை இயக்கியிருந்தார். அதிக விமர்சனங்களுக்கு ஆளான இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருந்தார்.

கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் தமிழிலும், தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் ரத்னகுமார் ஈடுபட்டுள்ளார். இதில் அமலாபால் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment