Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியது.

லார்ட்ஸ் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பாகிஸ்தான் 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில், 308 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பிருந்தது.

ஆனால், 1.5 ஓவரில் வங்கதேசம் 8 ரன்கள் அடித்ததை அடுத்து, 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியது. இதன் காரணமாக உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் 4-ஆவது அணியாக நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அரையிறுதியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி, 4-ஆவது இடத்தில் உள்ள அணியுடனும், 2-ஆவது இடத்தில் உள்ள 3-ஆவது இடத்தில் உள்ள அணியுடனும் மோதும். தற்போது புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 13 புள்ளிகளுடன் இந்தியா 2-ஆவது இடத்திலும், 13 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3, 11 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-ஆவது இடத்தில் உள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றும், தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திற்கும் தள்ளப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில், அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிக்கொள்ளும்.

முதல் அரையிறுதிச் சுற்று 9-ஆம் தேதியும், 2-ஆவது அரையிறுதிச் சுற்று 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

0 Comments

Write A Comment