Tamil Sanjikai

சேலம் ஈஷா மையத்தில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட காவிரி குரல் அமைப்பின் பணிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அனைத்து மட்டங்களிலும் உதவ தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக சேலம் செய்தியாளர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் தலைவர் நல்லுசாமி, காவிரியை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தமிழகம் கர்நாடகா மாநிலத்தில் காவிரி படுகைகளில் சத்குரு அறிவித்த 12 ஆண்டுகளில் 247 கோடி மரங்கள் நட எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், முதல் கட்டமாக நான்கு ஆண்டுகளில் 72 கோடி மரங்கள் நடும் முயற்சிக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தனது ஆதரவை தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment