குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் ஒருவர் அறைந்த சம்பவம் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2015ஆம் ஆண்டு குஜராத்தில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்திபட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.
இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். தனி நபராக செயலாற்றி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் கலவர வழக்கில் இவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர் காங்கிரஸ் கட்சிக்காக தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.
சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது, ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார். அவரை கன்னத்தில் அறைந்த நபரை அங்கிருந்த தொண்டர்கள் தர்ம அடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments