சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ விசாரணைக்கு மேகாலயத் தலைநகர் சில்லாங்கில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜீவ் குமாரைக் கைது செய்யக் கூடாது என்றும் சிபிஐக்கு அறிவுறுத்தியுள்ளது.
சாரதா சீட்டு நிறுவனம் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் இலட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இப்போதைய கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார் இருந்தார்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சாரதா சீட்டு மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்குத் தொடர்பான ஒருசில சான்றுகள் காணாமல் போனதை அடுத்து அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகததால் ராஜீவ்குமாரை வீடு புகுந்து கைதுசெய்ய சிபிஐ அதிகாரிகள் முயன்றனர்.
0 Comments