Tamil Sanjikai

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட நபர்களை கைது செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்கள் தாக்கப்பட்டனர், போலீசார் வாகனங்கள் உடைக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னமராவதி பகுதியை சுற்றியுள்ள 30 கிராமங்களில் நேற்று மாலை 144 தடை உத்தரவை இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் பிறப்பித்தார்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 1000 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமயத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு போட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பொன்னமராவதி பகுதி முழுவதும் திருச்சி மண்டல ஐஜி வரதராஜு மற்றும் திருச்சி மண்டல டிஐஜி லலிதா லட்சுமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment