தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் முடிந்த நிலையில், ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பரவலாக மழை பெய்தது. திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெங்களாபுரம், முத்தம்பட்டி, சீரங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
தேனி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தேனிஅல்லிநகரம், அன்னஞ்சி, பழனிசெட்டிபட்டி, அரண்மனைபுதூர், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைகாற்றுடன் மழை பெய்தது. போச்சம்பள்ளி, பனங்காட்டூர், புலியூர், அரசப்பட்டி, பண்ணந்தூர், பாரூர் உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், அரூர், பென்னாகரம்,மற்றும் பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. குள்ளம்பாளையம்,செங்கோட்டையன்நகர் ஒத்தக்குதிரை உள்ளிட்ட இடங்களில் இடி ,மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
0 Comments