`எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை அசின். அந்த படத்தில் அவர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார்.
முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க முடியாத அளவுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 பட உலகிலும் ஓய்வு இல்லாமல் நடிக்கிற அளவுக்கு படங்கள் குவிந்தன. எல்லா படங்களிலுமே அவர் பிரபல கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு அவர் இந்தி பட உலகுக்கு சென்றார். சில இந்தி படங்களில் நடித்து விட்டு, ஒரு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவர் மீண்டும் திரை உலகத்திற்குள் பிரவேசிக்க இருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.
0 Comments