Tamil Sanjikai

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரரான பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் பட்டியலில், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாடி பில்டர் (ஆணழகன்) பாஸ்கரனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் பாஸ்கரனுக்கு ஜனாதிபதி கையால் இந்த விருது வழங்கப்படும்.

''என் 20 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாக இந்த விருதை பார்க்கிறேன்'' என பாஸ்கரன் கருத்து தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment