ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தலில், 99.5 சதவீத வாக்களிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இன்று, அம்மாநிலத்தின் 310 வாக்குச் சாவடிகளில் முதல் உள்ளாட்சி தேர்தல்நடைபெற்றது. இதில் 99.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளார் மாவட்ட தேர்தல் அதிகாரி சுஷ்மா சவுகான்.
மேலும், ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில், 99.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments