Tamil Sanjikai

மதுரை மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ள கிராமம் பொதும்பு கிராமம். 1941-ஆம் ஆண்டு பொதும்பு கிராமத்தில் அம்மை, காலரா போன்ற பல்வேறு நோய்கள் பரவி வந்துள்ளன.அந்த நோயை கட்டுப்படுத்த அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு எருதுக்கட்டு விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா நடத்தப்பட்ட பின்பு அந்த கிராமத்தில் எந்த வித நோய்களும் வரவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

எருதுக்கட்டு விழாவில் 6 கரைகள் அமைக்கப்பட்டு இருக்கும், அந்த கரைகளில் இருந்து 16 காளைகள் வரவழைக்கப்பட்டு கம்பத்தில் கட்டி வைக்கப்படும். கட்டப்பட்ட காளையை இளைஞர்கள் ஒன்று கூடி காளையை அடக்க முயற்சி செய்வார்கள். காளையை அடக்க அவர்களுக்கு 10 நிமிடம் வழங்கப்படும், 10 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும். அப்படி அடக்கா விட்டால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எருதுக்கட்டு திருவிழாவை காண அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் வந்துள்ளனர். இந்த விழா இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. எருதுக்கட்டு திருவிழாவை காண ஏராளமான மக்கள் வருவதால் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment