டொரன்டோ ரேப்டர்ஸ் அணி முதன் முறையாக என்பிஏ கூடைப்பது சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அந்த அணியைப் பாராட்டும் நிகழ்ச்சி கனடாவின் டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் 10 லடசத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள சாலைகளில் லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடி மகிழ்த்தனர்..
அப்போது திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூவர் கைது செய்யப்பட்டனர். கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் இச்சம்பவம் குறித்து தெரியாததால், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருந்தது. அணியின் பாராட்டு விழா நிறுத்தப்பட்டு, நிலைமை சீரானதன் பின்னர் பாராட்டு விழா தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments