இம்மு காஷ்மீருக்கு சிறப்பு அநதஸ்து வழங்கும் 370வது சட் டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ''370வது சட்டப்பிரிவை திரும்பப் பெறப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுவதும், துப்பாக்கிச்சூடுகள் நடப்பதாக வரும் செய்திகள் அனைத்தும் உண்மை.
ஜம்மு காஷ்மீர் இந்துக்கள் பெரும்பான்மை மாநிலமாக இருந்திருந்தால், 370வது பிரிவின் மீது பாஜக கை வைத்திருக்காது" என்று கூறினார்.அவரது இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த, முஸ்லிம் இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் முகமது அமீர் ரஷீத், ''சிதம்பரத்தின் பேச்சு இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியது. சிதம்பரத்தின் முகத்தில் கரியை பூசுபவர்களுக்கு, பக்ரீத் பரிசு நிதியில் இருந்து 21 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.
0 Comments