Tamil Sanjikai

எகிப்து நாட்டில், முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த ஜூலை 2013 -ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதுமட்டுமில்லாமல், அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முகம்மது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

0 Comments

Write A Comment