Tamil Sanjikai

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்ட விமான பயணச் சீட்டுகளை கொண்டு தங்களது விமானத்தில் பயணிக்க கண்டிப்பாக அனுமதி இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர் வேஸ் நிறுவனத்தால் பல்வேறு சேவைகளை தொடர முடியாத சூழல் நிலவிவருகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பலர் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் விமான சேவை ரத்து செய்யப்பட்டால், அதற்குரிய டிக்கெட்டுடன் வேறு நிறுவன விமானங்களில் பயணிக்க சில நிபந்தனைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம். இதனால், ஏர் இந்தியா நிறுவனம், தற்போது சிக்கலில் உள்ள ஜெட் ஏர்வேஸ் பயணிகளை அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெட் ஏர்வேஸ் பயணிகளை அனுமதிக்கும் திட்டம்தங்களுக்கு இல்லை என்று ஏர் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment