Tamil Sanjikai

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

"பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரித்தார்.

சுதந்திரத்துக்கு பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள், பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர், இனியும் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்தியா மக்களை ஜாதி, மத அடிப்படையில் பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருந்தால் பாகிஸ்தானை பிளவுபடுத்த யாரும் தேவையில்லை, அது தானாகவே துண்டு துண்டுகளாக சிதறி விடும்". இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Write A Comment